ஞாயிறு, 17 ஜூலை, 2011

எப்படி அழைப்பது ?


..................................................................................................................................
எப்படி உம்மை அழைப்பதென்று
தெரியவில்லை?
மனிதரென்று அழைக்க,
தகுதி இல்லாதவர் நீங்கள்.
மிருகமென்றால்,
அவை என்னை கோபிக்கும்.
அவை,
லஞ்சம் வாங்குவதில்லை.
பரம்பரை சுகம் காண
பாவம் சேர்ப்பதில்லை.
கோபம் வருகிறதா?
கண்கள் சிவக்கிறதா?
அனுதாபப்படுகிறேன்.

மத யானையேறி,
பாரத தேசத்தை
ரத்த சேதம்,
ஆக்கி வரும் உம்மை
என்னவென்று அழைப்பது?
சாதி சண்டையுண்டாக்கி
மண்டை உடைத்து-
சரித்திரம் படைப்பதாக
நாட்டின்,
சோதியை அணைக்கும்
உம்மை,
என்னவென்று அழைப்பது?

போதைப்பொருளில் திளைத்து,
ஆகாயத்தில் பறப்பதாக
நினைத்து,
தரையில் காலூன்ற முடியாத
உம்மை
என்னவென்று அழைப்பது?
காதல் குளத்தில்
மீன் பிடிப்பதாக நினைத்து,
கானல் கடலில்
திமிங்கலமிடம் தொலைந்துபோகும்
உம்மை
என்னவென்று அழைப்பது?
சொல்
என்னவென்று அழைப்பது?
கோபம் வருகிறதா?
கண்கள் சிவக்கிறதா?
அனுதாபப்படுகிறேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக