திங்கள், 25 ஜூலை, 2011

முதல் காதல்

மணம் முடிந்தப் பின்னும்,
மனைவியைக்  காதலித்த போதும்,
மகனைத் தாலாட்டிய போதும்,
ஏதேனும் ஒரு வினாடி.......
மனம்,
அவளை நினைக்கத்தான்,
செய்கிறது.

வானம் தந்த
இறகுப் போல்
வந்தவள்,
வந்த அவள்..............
தாங்க முடியா
பாரம் தந்து,
சென்றாள்.

தேவதை அருளிய
சிறகுப் போல் 
வந்தவள்,
வந்த அவள்..............
காதல் தீயில் 
என்னை விறகாக்கிவிட்டு
சென்றாள்.

இதயக்கதவு
அவள் வருகைஎண்ணி
மூடிக்கிடந்தது. 
தாமதமாக
வந்தவள்,
வந்த அவள்............
கல்லறை சாவியை,
திணித்துவிட்டு
அவசரமாக
சென்றாள்.

என்
மலர்ப்பாதை,
அவள் தடம்ப்பட,
தவம்கிடந்தது.
தங்கத் தேரென
வந்தவள்,
வந்த அவள்.............
தேளாய் விஷம் 
கொட்டி,
சட்டென சென்றாள்.

செந்நீறாய்
என் படுக்கையும்,
கண்ணீராய்
அவள் நினைவும்,
காலம் என்னை,
கழுவில்லேற்றியிருந்தது.
வேதனை தந்தாலும்,
வலியை தந்தாலும்,
கண்ணீரை தந்தாலும்,
காலம் கடந்த நினைவை,
நான் வரவேற்கவே செய்கிறேன்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக