பாக்காத காதல்,பாக்குற காதல்,பாக்கப்போற காதல், கேக்காத காதல், கேட்ட காதல், பேசாத காதல்,பேசுற காதல்,........... இப்படி என்னென்ன ஐட்டம் இருக்கோ ,எல்லாத்தையும் பாத்து மண்டைய பிச்சிகிட்டு குத்தாலத்துக்குப் போய் குளிச்சிட்டு வரவங்க இன்னமும் நெறைய பேரு இருக்காங்க.
இந்த பீரியட்லதான் நெறைய foreign மாப்பிள்ளைங்க entry குடுத்தாங்க.ஒன்னு தியாகியா மாறி சேத்துவைப்பாங்க,இல்ல காதலன் கிட்ட செம அடிவாங்கிட்டு கூட இருக்கிற அல்லக்கைய அறைவானுங்க, அதுவும் இல்லேன்னா காதலன குத்தவோ சுடவோ போவாங்க,எதாவது ஒரு செண்டிமெண்டு கிராக்கி நடுவுல வந்து சாவுகிராக்கி ஆயிடும்.
காதலன வாடா,போடான்னு மரியாதையா கூப்பிட ஆரம்பிச்சது இந்த டைம்லதான்.செங்கல் சைஸ்ல இருந்து தீப்பெட்டி சைஸ் வரைக்கும் செல் போன் வந்து பெத்தவங்க வாயில பாலை ஊத்துனதும் இந்த டைம்லதான்.
ஒத்த ரோஜாவ கைல வச்சிகிட்டு பஸ் ஸ்டாப் பஸ் ஸ்டாப்பா இவங்க செஞ்ச ரௌசு இருக்கே,தாங்க முடியலடா சாமி.டக்குனு பாத்தா ஆம்பளையா,பொம்பளையான்னு தெரியாத மாதிரி ஒரு ஹேர் ஸ்டைலு,இவனுக்குன்னு ஒரு மென்டல் பிரெண்டு,போட்டுக்கரதெல்லாம் foreign brand துணிங்க ,பேசறது மட்டும் ரொம்ப பரதேசியாட்டம் பேசுவாங்க.கவிதைங்கிற பேர்ல இவங்க நம்ப கழுத்த அறுத்தத நெனச்ச,............................................................................... சாம்பிள் ஒன்னு பாருங்க,
இதயத்துல இடி,கண்ணுல மழை.
இந்த ஒரு வரிக்காகவே நாப்பது தடவ நானே அந்த படத்த பாத்தேன்,எந்த படம்னா கேக்குறீங்க, வேணாம் விட்டுருங்க.
இது ஒரு சூப்பரான பீரியடுங்க,பொறிக்கிய பாத்தாலும் காதல் வரும்,பேப்பர் பொறுக்கியப் பாத்தாலும் காதல் வரும்,கொலைகாரனைப் பாத்தாலும் காதல் வரும், கொள்ளைக்காரனைப் பாத்தாலும் காதல் வரும்,புதுசு புதுசா நெறையக் கத்துக்குடுத்தாங்க .கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டுக்குத் தெரியாம குடும்பம் நடத்துவாங்க,குடும்பம் நடத்திட்டு வீட்டுக்கு தெரிஞ்சி கல்யாணம் பண்ணிக்குவாங்க.டயலாக் கொஞ்சம் கேப்போமா.
காதலன்: என்னை பிடிச்சிருக்கா?
காதலி: பிடிச்சிருக்கு.
காதலன்: ஏன்?
காதலி: தெரியல?
காதலன்: ஏன் தெரியல?
காதலி: புரியல.
காதலன்: சந்தோசமா இருக்கு.
காதலி: எனக்கும்தான்.
காதலன்: மறக்கமாட்டியே?
காதலி: மாட்டேன்.
ஹலோ எனன? ஒரு நிமிஷம் படிக்கிறதுக்கே உங்களுக்கு கிர்ருன்னு இருந்தா, ரெண்டர மணிநேரம் எங்க நெலமைய யோசனை செஞ்சி பாருங்க.
இத பத்தி சொல்ல ஒன்னும் இல்லங்க,நான் இன்னும் கொஞ்ச நாளாவது ஏதாவது எழுதனும்னு ஆசைப்படுறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக