அருகே வராதீர்-
விலகிச் செல்லுங்கள்
நான்,
தொலைந்து போனவன்!
கண்ணில் முள் வைத்து,
உதட்டில் விஷமேந்தி,
இதயத்தை இருகூராக்கிய
இவர்களிடமிருந்து,
தொலைந்து போனவன்!
நெஞ்சம் உருக,
கொஞ்சிப் பேசி,
சென்றப்பின்...........
வஞ்சம் தீர்க்க நினைக்கும்
இவர்களிடமிருந்து
தொலைந்து போனவன்!
மயிலிறகாய் வருடிவிட்டு,
மறு நொடியில்,
ஈட்டியால் சொருகிவிட்டு
செல்லும்,
இவர்களிடமிருந்து
தொலைந்து போனவன்!
முன் புறத்தில்,
இதயக் கதவை திறந்து வைத்து,
நுழைந்ததும்,
மரணத்தின் வாசலில்,
தள்ளிவிடும்,
இவர்களிடமிருந்து
தொலைந்து போனவன்!
யானை முட்டைக்கும்,
வெள்ளை காகத்தின் குட்டிக்கும்,
பேரம் பேசும்,
இவர்களிடமிருந்து
தொலைந்து போனவன்!
காகிதக் கப்பல் செய்து,
சிறகிரண்டுக் கட்டி
ஆகாயத்தில் பறக்கவிடும்,
ஜென்மங்கள்
இவர்களிடமிருந்து
தொலைந்து போனவன்,
ஆம்,
தொலைந்து போனவன்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக