புதன், 27 ஜூலை, 2011
எட்டு எட்டா...........
திங்கள், 25 ஜூலை, 2011
முதல் காதல்
வியாழன், 21 ஜூலை, 2011
ஒரு ஊர்ல ஒரு நாட்டாமை
பஞ்சயாத்து கூடுது , நாட்டாமை பேசுறாரு ,
' ஆரா அது பஞ்சயத்த கூட்னது முன்னாலே வாடா ',
" ஐயா நாந்தாயா ப்ராது குடுத்தேன் "
"சொல்றா ,எதுக்கோசரம் ப்ராது குடுத்தே, ஆயி போறப்ப சொம்பு காணாம போயிடிச்சா ?"
"இல்லங்க்யா."
"கதிரு அறுக்குறப்போ அருவா காணாம போயிடிச்சா ?"
"இல்லங்க்யா ."
"அப்புறம் எதுக்கோசரம் பஞ்சாயத்த கூட்ன வாய தொறந்து சொல்லு ."
"ஐயா அடுத்த மாசம் என்ற மவனுக்கு கண்ணாலம் வச்சிருந்தேன் ,அது நடக்காதுங்கயா ."
" வெளக்கமா சொல்றா ."
"சிலுக்கு தெரு சிங்காரத்தோட பொண்ணுக்கு தான்யா என்ற மவன குடுக்கறதா இருந்துச்சி ,இப்போ அந்த பொண்ணு என்ற பையன கட்டிக்க இஷ்டமில்லேன்னு சொல்லுதுயா ."
"என்றா சொல்றே நீ ,குலுக்கிட்டு வரது சீம பசுவாயிருந்தாலும் ,சிலுப்பிட்டு நிக்கறது காங்கேயேன் காளையால்லே இருக்கோணும் ,கூப்புடறா பொண்ணையும்,பையனையும் ."
பொண்ணும்,பையனும் ஆஜர் .நாட்டமை பெண்ணிடம் ,
"என்னம்மினி இவரு சொல்றது நெசமா,அவரு பையன கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டியாமே?'
பெண் அமைதியா இருக்கா ,பெண்ணோட அப்பா பேசுறாரு ,
"அது எப்படிங்கய்யா இம்புட்டு பேருக்கு முன்னாடி வாய தொறந்து பேசும் ,அதுக்கு கூச்சமா இருக்காதா ?'
இடையில் பெண் பேசுகிறாள்
" எனக்கு எதுக்கோசரம் கூச்சம் ,சொல்ல வேண்டியத வெளக்கமா சொல்லிடுறேன் ,அந்த பையனுக்கும் எனக்கும் பரிசம் போட்டப்ப ,நான் Wipro ல இருந்தேன் ,இப்ப எனக்கு Microsoft ல வேல கெடச்சிருக்கு ,மாபிள்ள பையன விட எனக்கு 30,000/- ரூபா சம்பளம் அதிகம் ,என் status கும் அவன் status கும் ஒத்து வராது ."
மாப்பிள்ளை அழுவறான் .
"ஐயா போனவாரம் வரையிலும் Coffee shop ல என் கைய புடிச்சிக்கிட்டு தெனமும் கொஞ்சிட்டு இருந்த பொண்ணு ,இன்னைக்கு இந்த மாதிரி பேசுதுயா."
பெண் பேசுறாள் .
" What nonsense,நான் எப்ப உன்கூட Coffee shop க்கு வந்தேன் ,பொய் சொல்லாதே ?"
நாட்டாம வாய தொறக்குறார்.
"என்றா அந்த பொண்ணு உன்கூட Coffee shop க்கு வந்துச்சின்னு சாட்சி இருக்கா ?"
"நான் பாதேன்யா ."
" நீ ஆருக்கு சொந்தம்லே ?"
"பையனோட சித்தப்பாயா ".
"செல்லாது ,செல்லாது ."
"நான் பாத்தேனுங்க ."
" நீ யாருலே ?"
"மாபிள்ளயோட தம்பிங்கயா ?"
"ம்ம்ம்ம் செல்லாது செல்லாது ?"
ஒரு சின்ன பையன் பேசறான் .
"ஐயா நான் பாதேனுங்க்யா ."
"என்ன கண்ணு பாத்தே ?"
" இந்த அக்கா அந்த மாமா கைய புடிச்சி coffee shop க்கு கூட்டிகிட்டு போச்சு ,நான் பொறநாலேயே போயி பாதேன்யா ,ரெண்டு பெரும் coffee ய குடிக்கலையா,ரொம்ப நேரம்மா கைய புடிச்சிக்கிட்டு பேசிகிட்டே இருந்தாங்க ."
" என்றா கண்ணு பேசுனாங்க ".
"இந்த அக்கா மாமாகிட்ட உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ,கண்ணாலம் கட்டிகிட்டா உங்களைதான் கட்டிக்குவேன்னு
சொல்லிச்சியா ,அதுக்கு மாமா சந்தோசமா சிரிச்சாருயா ."
பெண் கத்துகிறாள் .
"பொய் இந்த பையன் பொய் சொல்றான் ."
சிறுவன் தன் cell phone னை எடுக்கிறான்.
"இந்த மாதிரி எதாச்சும் நடக்கும்னுதான்யா நான் எல்லாத்தையும் record பண்ணியிருக்கேன் ."
நாட்டமை cell phone னை வாங்கி பாத்துட்டுயிருக்கிறார் .பெண் தந்தை பேசுறார் .
" ஐயா இப்பெல்லாம் technology ரொம்ப develop ஆயிடிச்சியா ,morphing கீபிங் செஞ்சி ...
நாட்டமை கத்துறார் ,
"நிறுத்தறா .....(நிறுத்தறா ...ருத்றா...தறா...றா.)காலணா சம்பாதிச்சாலும் கக்கூசுக்கு token குடுத்து சம்பாதிச்சவன்டா என்ற பாட்டன் ,என்றா வக்காளி technology,கண்ணாலம்கிறது Coffee shop ல ஆரம்பிச்சி Walmart ல முடியறதுன்னு நெனச்சியா ,மொளைக்கிற நெல்லு பொய் சொல்லும்டா ,சின்ன பையன் கைலயிருக்கிற Cell லு பொய் சொல்லாதுடா .இன்னிக்கு Microsoft ல வேல கெடச்சதுக்கு இந்த பையனோட பொண்டாட்டி ஆகமாட்டேன்னு சொல்றவ ,நாளைக்கு Billgates சோடவெப்பாட்டி ஆகறதுக்கு கட்ன புருஷன் தலையில கள்ளபோடமாட்டான்னு என்றா நிச்சயம் .மானம் பாத்து நிக்கிற பூமிலே நம்ப பூமி ,காத்துல கவுச்சடிச்சாலேயே கை கழுவாம வர்ற கூட்டம்லே இது , technology பத்தி பேசுரானாம் .........
பேச பேச நாட்டாமை ரத்தவாந்தி எடுத்து விழுகிறார் ,கூட்டம் ஓடி வருது.
நாட்டாமை வீட்ல அவங்க பொண்ணு யார்க்கிட்டயோ cell ல பேசிட்டிருக்கு .
" ஒண்ணும் problem இல்லே ரவி ,என்ற அப்பன் வெத்தலையில சுண்ணாம்புக்கு பதிலா வெசத்த தடவிட்டேன் ,அதனால நம்ப marriage ல ஒரு பிரச்சனையும் வராது ."
A Film By,
Mokkapaandi
புதன், 20 ஜூலை, 2011
சினிமாவில் காதல் 2
செவ்வாய், 19 ஜூலை, 2011
சினிமாவில் காதல்
காதலன்: கண்ணே....
காதலி: நாதா.....
காதலன்: அமுதூறும் உன் பேச்சும் ,தாலாட்டும் தென்றலும், குளிர்ந்த நிலவும் ,பட்சிகளின் கீதமும்,
நறுமணம் வீசும் மலர்களும் .............ஆஹா ....இப்பொழுது இப்படியே இருந்து விடலாகாதா?
(காதலி நாணத்துடன் சிரிக்கிறாள் ).
(இது டிசண்டா பிட்டு போடுறது ).
1940s
இப்போதும் பூங்காதான்.
காதலன்: அன்பே ........
காதலி: அத்தான் ........
(அப்புறம் ரொம்ப நேரம் பேசிக்க மாட்டாங்க, மூஞ்சிய மூஞ்சிய பாத்துட்டே இருப்பாங்க).
காதலி: அத்தான் எவ்வளவு நேரம்தான் எதுவும் பேசாமல் பார்த்து கொண்டிருப்பாதாக உத்தேசம். காதலன் : மனதோடு மனம் பேசும்போது இதழ் பேச வேண்டுமா ?
காதலி : அப்படியா?
காதலன்: ஆகா, நாணத்தில் உன் கன்னம் ரோஜாவை விட சிவந்துவிட்டதே.....
காதலி: போதும், போதும், உங்கள் எண்ணம் எனக்கு தெரியாது என்று நினைத்து விட்டீரா ...... (பார்க் பெஞ்சை சுற்றி அவள் ஓடுவாள் , உடனே இவரும் பின்னாடியே ஓடுவாரு).
(இது ஒரு வகையான பிட்டு ).1950s
தென்னம்தோட்டம் மரத்துக்கு ஒரு பக்கம் காதலன் இருப்பான், இன்னொரு பக்கம் காதலி இருப்பாள். கொஞ்ச நேரம் சுத்தி சுத்தி வருவாங்க. அப்புறம் ஓடி பொய் பக்கத்துல இருக்கிற ஆத்தங்கரை மணல்ல உக்காருவாங்க.
காதலன்: ஆனந்தி...
காதலி: சொல்லுங்கள் கண்ணன்....
( இருவரும் கை கோர்த்துகொள்வார்கள்).
காதலன்: இந்த சிவப்பு நிற புடவையில் நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா.
(B&W காலத்துல அவங்க சொல்றத வெச்சுத்தான் நமக்கே என்ன கலர்னு தெரியும்). (உடனே காதலி திடீரென்று கண் கலங்குவாள்).
காதலன் : (அவள் முகத்தை தாங்கியவாறு) ஆனந்தி என்ன ஆயிற்று, ஏன் கண் கலங்குகிறாய்?
காதலி : கண்ணன் ... இந்த மகிழ்ச்சி இறுதிவரை நிலைக்கவேண்டுமென நினைத்தே கலங்குகிறேன். (இவரு உடனே அவளை ஆதரவா அணைப்பாரு).
காதலன் : அட அசடே அதற்காகவே அழுகிறாய், இதயத்தின் இறுதி ஓசை வரை, உன்னை என்னிடமிருந்து எவராலும் பிரிக்க இயலாது.
( காதலி காதலின் மார்பில் சாய்ந்து கொள்வாள்).
(இது செண்டிமெண்ட் பிட்டு ).1960s
மெரீனா பீச்
காதலன்: நிர்மலா ..
காதலி: (பீச் மணலை நோண்டியப்படி) சொல்லுங்க சுந்தர்.
காதலன்: உன் சிநேகிதிங்க எல்லாம் என்னமோ சொன்னதாக சொன்னியே என்ன அது?
காதலி: அதுவா? அவர்களுக்கு என் மேல் பொறாமை.
காதலன்: பொறாமையா? உன் மேல் பொறாமை வருவதற்கு காரணம் என்ன?
காதலி: அதை சொன்னால்தான் உங்களுக்கு தெரியுமா?
காதலன்: சொன்னால்தானே தெரியும்.
(காதலனின் சட்டை மேல் பட்டனை நோண்டுவாள்).
காதலி: உங்களை போன்ற அழகான ஆண்பிள்ளை அவர்களுக்கு கிடைக்கவில்லையே என்றுதான்.
காதலன் : அப்படியா ?
காதலி : (அவன் கன்னத்தை தட்டியவாறு) அப்படிதான் .....
(சொல்லிவிட்டு எழுந்து ஓடுவாள், இவனும் பின்னாலயே ஒரு சைடாக துரத்தியவாறு ஓடுவான்). (இது ஒரு மொக்க பிட்டு).1970s
அதே மெரீனா பீச்
காதலன்: டார்லிங்
காதலி : சொல்லுங்க டியர்
காதலன்: உட்லண்ட்ஸ்ல பாபி படம் போகலாமா?
காதலி: இன்னைக்கு வேண்டாம், அடுத்த வாரம் போகலாமே
காதலன்: ஏன் ?
காதலி : இன்னைக்கு டாடி நாடக சபாலே அவர் ப்ரெண்டோட மகள் நாட்டிய அரங்கேற்றத்துக்கு என்னை கூட்டிட்டு போறத சொல்லியிருக்கிறார்
. காதலன்: உங்கப்பா சரியான கண்ட்ரியா இருப்பார் போலிருக்கே?
காதலி : (சிணுங்கலுடன்) சுந்தர் டாடிய தப்பா பேசாதிங்க ப்ளீஸ்.
காதலன்: அப்பாவை பத்தி சொன்னா அவ்வளவு கோபம் வருதே. நாளைக்கே நம் கல்யாணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் என்ன செய்வாய்?
காதலி : வேறென்ன செய்வது அவர் கைகாட்டும் மாப்பிள்ளைகே கழுத்தை நீட்டவேண்டியதுதான்.
காதலன்: அப்பாடா ஒரு வாயாடிகிட்டயிருந்து தப்பிச்சேன்டாப்பா சாமி.
காதலி : என்ன சொன்னீங்க ....
(செல்லமாக காதலன் மார்பில் குத்துவாள், அவன் தடுப்பதை போல் பாவ்லா செய்து கட்டியணைத்து கொள்வான் . மூஞ்சிய மூஞ்சிய தேய்கிற மாதிரி பார்ப்பான் . உதட்டை கடிப்பான், பெருமூச்சு விடுவான் ).
காதலன் : டார்லிங்
காதலி : டியர்
(அப்புறமென்ன மறுபடியும் கொலவெறியோட கட்டிபிடிச்சிக்குவாங்க).
என்ன கன்றாவி பிட்டோ?1980s
ஐயோ ஐயோ இந்த காலகட்டத்துல காதலை நெனச்சா சிரிப்பு சிரிப்பா வருது. காலத்தால் அழியாத கல்வெட்டுல பொறிக்கவேண்டிய காலம் இதுதான். பெல் பாட்டம் பேண்ட்டு , நாய் நாக்கு மாதிரி ஷர்ட்டு காலரு , பரதேசி மாதிரி பரட்ட தல, எமதர்மன் பாச கயிறு மாதிரி பெல்டு, செம காமெடிப்பா . (காதலன் புல்லேட்ல காதலியே வச்சிகிட்டு ஓட்டிட்டு வரான். அவன் வாயிலே சிகரெட்டு. அப்படியே ஒட்டிகிட்டே சந்து, பொந்தெல்லாம் சுத்துறாங்க, அவ அடிக்கடி தன செயினை கடித்தவாறு சிரிச்சிகிட்டே வரா. வழியிலே பூக்காரி கிட்டே பூவாங்கி அவ தலையிலே வச்சு விடுறான், அப்பயும் அவன் வாயிலே சிகரட் இருக்கு . அப்படி இப்படின்னு VGP Golden பீச்சுக்கு வந்து சேந்துட்டாங்க. அங்க புல்வெளியிலே கொஞ்ச நேரம், Gold spot குடிச்சிட்டு கொஞ்ச நேரம் , பீச்சுல கொஞ்ச நேரம் ....முக்கியமான விஷயம் காதலன் வாயில எல்லா சீன்லயும் கண்டிப்பா சிகரட் இருக்கு ...... அப்படியே பீச் ரிசார்ட் பக்கம் வரும்போது மழை வந்துடும். அவன் பன்னிகாச்சல் வந்த மாதிரி நடுங்குவான் ...அவ பன்னியே கடிச்சமாதிரி நடுங்குவாள் ..அப்புறம் மெதுவா காட்டேஜ் உள்ளார போவாங்க .....
(அட போங்கப்பா, இது வரைக்கும் வந்த எந்த சீனுக்கும் வசனம் இருக்காது மியுசிக்தான் ....... Parararabbabaa .....Parararabbabaa.....Rabarabapabappaaa....Rabarabapabappaaa....Thurururutthuthu......Chujumchujumchum.......Chujumchujumchum............) காதுல ரத்தம் வந்தாலும் கடபாறைய எடுத்து சொறிவிக்கலாமுன்னு இருக்கும். )
இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் கடைசியிலே அந்த காதலன் கான்சர் வந்துதான் சாவான்.
திங்கள், 18 ஜூலை, 2011
தொலைந்து போனவன்
ஞாயிறு, 17 ஜூலை, 2011
எப்படி அழைப்பது ?
வெற்றி நம் கையில்
தோல்வியைக் கண்டுத்,
துவண்டுவிடாதே வாலிபா-
எது தோல்வியென ,
விளக்குவாயா நீ?
வாழ்க்கையின் கண்ணோட்டத்தில்
எதுவுமே தோல்வி இல்லை,
எத்தனையோ எதிர்பார்ப்புகள்,
ஏராளமான ஏமாற்றங்கள்,
ஆனால்,
நீ, நீயாக இருக்கும்வரை
வாழ்க்கையின் ஏமாற்றங்கள்
வெறும் அலையோசை
மட்டுமே...............
ஆர்ப்பரித்தாலும்,
பாறையான உன்
இதயத்தில் பட்டு,
திசைத் தெரியாமல் சிதறிவிடும்.
தடுக்கும் படிகள் எல்லாம்,
உணர்த்தும் பாலங்கள்!
களைந்துவிடு,
உன் இதயத்தை வருத்தும்
விஷ செடிகளைக்
களைந்துவிடு.
வெற்றி விருட்ஷம்மாக
விளைந்துவிடு........
இதயத்தை உறுதிபடுத்து,
வெட்டி பாரத்தை,
வெட்டி எறிந்துவிடு.
தோளின் பாரத்தை உயர்த்து.
பாரத புதல்வனென வலம் வா.
வாழ்கையில் வேட்கைக் கொள்.
வேங்கையாக முன்னேறு.......
வேலையில்லையென இருண்டுவிடாதே,
தட்டியக் கதவெல்லாம் திறக்காது?
கொட்டிய முரசு ஒலிக்காமல் போகாது.
கொட்டுவதற்கு உன்.......
இரு கைகள் இருக்கின்றன,
இரும்பெனக் கொண்டு
உழைத்து வா,
வெற்றி உன் இருக்கையாகிவிடும்.
தொடர்த் தொல்லைகள்
இடர் ஏற்படுத்துவதாய்
எண்ணாதே.......
படமெடுத்து நிற்கும்
உன் நம்பிக்கையின் முன்
அவை,
இடம் தெரியாமல் போகும்.
சுடர் விட்டு ஜொலிக்கும்
ஜோதியாய் தெரிவாய் நீ.
வேலையில்லா வெட்டி பசங்க
" தவமா பெத்த பையன்
தறுதலையா இருக்கானே "-
உள்ளுக்குள்ள அழுவறான் அப்பன்,
ஊர சுத்த காசு கேட்டு
வெக்கமேயில்லாமே கைய ஆட்டிட்டு நிப்பான்.
ஐயோ..........
உருப்புடவேமாட்டான்னா ,
ஒப்பாரி வெக்கிறா அம்மா.
அதெல்லாம் பாத்தா
இருக்கமுடியுமா சும்மா.
வேலைக்கு போகசொல்லி
கேக்குறாளே அக்கா.......
காதுலையே போட்டுக்காம
போட்டுக்கிறான் கலர் கலரா.....
சொக்கா.
நண்பனோட சம்பளம்,
மாசம் மூணு லட்சம்,
வீணா போன காதுல கேட்டும்
இல்லாம போச்சே கூச்சம்.
வெட்டியா சுத்தறவனுக்கு
வெரைட்டி ரைஸ் கேக்குது,
கட்டி வச்சு அடிக்கனும்னு
மனசுதான் துடிக்குது.
சொல்றத சொல்லிட்டேன்,
காத்துவாயன் பாட்டுக்குள்ளே.
புரியாம சுத்துறாங்க
சில பேரு சிட்டிக்குள்ளே.

