வெள்ளி, 2 செப்டம்பர், 2011

சும்மா நடிக்காதீங்க

எத்தனை ஆண்டுகள்
கழிந்தால் என்ன ?
எத்தனை உறவுகள்
கடந்தால் என்ன?
நம்மில் விதைந்த
முதல் காதலை
மறந்தவர் உண்டா?
இல்லையென....
மறுப்பவர் தான்
உண்டா?

இன்னமும் அவள்
நினைவு,
என்னை சுடும்போது......
என் நினைவு .......
தொலைவில் நின்றாவது
அவளை தொடுமா?
நினைக்காத உத்தமர்கள்
உண்டா?
சகிக்க முடியா
காட்சிகளை பொறுக்காமல்
கண்மூடி,
வாய்மூடி,
காதை பொத்தி,
இருந்துவிடுகிறோம்....
தகித்து கொண்டிருக்கும்
அவள் ஜ்வாலையில்...........
திரும்ப திரும்ப
கருகினாலும்.........
விட்டு விலக நினைபவர்தான்
உண்டா?

ஏதேனும் ஒரு
நேரத்தில்,
அவள் பெயர்
எழுத நேர்ந்தால்........
சற்று அழகாக........
எழுத முயற்சிக்காதவர்....
உண்டா?
எப்பொழுதாவது,
அறியாக் குழந்தையொன்று........
அவள் பெயரை,
சொல்லநேர்ந்தால்........
பிறர்,
அறியா வண்ணம்........
விழி நீரை மறைகாதவர்தான்
உண்டா?

அவள் எனக்கானவள்......
எனக்காகவே ஆனவள்.......
ஆயிரம் கனவுகள்,
கண்டப் பின்...........
ஒரே வார்த்தையால்.........
சிதைத்து சென்றவளை.......
தலை நரைத்தும்.....
தள்ளி வைத்தவர்,
உண்டா?
வாழ்வில் திரும்ப,
அவளை பார்க்க
நேர்ந்தால்..............
அவள் சிந்தும்.......
ஒரே ஒரு.........
புன்னகையோ?
கண்ணீரோ?
சாப விமோசனம்,
பெற........
விரும்பாதவர்தான்,
உண்டா?
முதல் காதலை
மறந்தவர் உண்டா?
இல்லையென....
மறுப்பவர் தான்
உண்டா?

3 கருத்துகள்: