இவ்வளவு தாமதமாக,
வந்த நீ,
காயம் பட்ட
ரணத்தை குணப்படுத்துவாய்.......
என்று நினைத்த
வேளையில்,
இன்னமும் ஆழமாக
கிளறிவிட்டு
சென்றுவிட்டாயே.
சிந்தும் ஒவ்வொரு
கண்ணீர் துளியிலும்......
கைக்கொட்டி சிரிக்கிறாயே!
ஆண்மகன் கண்ணீர்
விடலாமா?
கண்ணீருக்கு
ஆண்பால்,பெண்பால்
தெரியாது.....
அவள்மீதுக் கொண்ட
அன்பால்......
நொறுங்கிய இதயத்தின்,
சிதறல்களே.....
கண்ணீராய் தெறித்து
கொண்டிருக்கின்றன.....
அழகாய் வந்து
முழுதாய் என்னை
வாங்கிசென்ற நீ..........
நடுவழியில்,
போட்டு உடைத்தது
ஏனடி?
உன் தெருவெங்கும்
என் துகள்கள்.......
இன்னமும்,
உன் பாதம் பட.......
தரையில்,
துடித்துக் கிடக்கின்றன.
வேண்டாம்......
உன் பாதம்
பட வேண்டாம்.......
தாண்டியேனும் செல்....
உன் நிழலையேனும்
சுவாசித்து கொள்கிறேன்.
திரும்ப,
திரும்பக்,
கேட்கிறேன்.....
ஏன் சென்றாய்?
விரும்பித்தானே....
விரும்பினோம்.
இருவரும்
முடிவு செய்துதானே.........
காதல் செய்தோம்......
காதல் முடிவு
மட்டும்.......
உன் தனிப்பட்ட
முடிவாக அமைந்தது
ஏன்?
அதை மட்டும்
முடிவாக,
சொல்லிவிட்டு செல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக