உறைந்த நிமிடங்கள்...
நிறைந்த நினைவுகள்...
மறைந்த வேதனைகள்...
கறைந்த கண்ணீர்த் துளிகள்...
ஏதோ
ஒரு திசையில்,
இன்னமும்
கண்சிமிட்டி செல்கின்றன.
முன் பொழுது
நீ என்னை,
தேடி வந்ததும்.....
எப்பொழுதும்
சேர்ந்தே இருப்பேன்
என சொன்னதும்.......
கணப்பொழுது.......
நினைத்தாலும்.......
நினைத்தாலும்.......
நினைத்தாலும்.......
வேதனை உணர்ச்சிக்கு.....
சரியான வார்த்தை,
அகராதியில் தேடியும்,
கிடைக்கவில்லை.
கத்தியின்றி,
ரத்தமின்றி,
சாகடிக்கும் கலையை
எங்கே கற்றாய்?
நீ கேட்டால்,
தருவதற்கு
நான் காத்துகொண்டல்லவா
கிடந்தேன்.
பின் ஏன்.....
காதலை விற்றாய்?
நூதன கொலைகாரி
நீ.......
இல்லையில்லை,
கலைகாரி நீ.
காதல் வந்ததுக்கு,
காரணம் சொன்னாய்.......
கையில் காயம் பட்டதற்கு,
காரணம் சொன்னாய்......
காத்திருக்க வைத்தாய்,
காரணம் சொன்னாய்......
எடை குறைந்ததற்கு,
காரணம் சொன்னாய்.......
அடிக்கடி கோயில் செல்வதற்கு,
காரணம் சொன்னாய்.....
மறதிக்கு திட்டு வாங்கியதற்கு
காரணம் சொன்னாய்.....
தம்பி பிறந்தநாளுக்கு
வாழ்த்து சொல்ல மறந்ததற்கு,
காரணம் சொன்னாய்......
சாப்பிட பிடிக்கவில்லைஎன்பதற்கு
காரணம் சொன்னாய்.......
உன்னையறியாமல் அழுவதற்கு,
காரணம் சொன்னாய்....
அதற்கு காரணம் சொன்னாய்,
இதற்கு காரணம் சொன்னாய்,
பிரிந்துவிடலாம் என்பதற்கு
மட்டும்,
ஒரு காரணம் கூட,
சொல்லாமல் சென்றுவிட்டாய்...
நீ,
சென்றேவிட்டாய்.

what to say???????
பதிலளிநீக்குIthai padikaravungaludaiya kaneer than intha kavithai ku kidaikum prize.