என்னவாயிற்று......
நம்மை சுற்றி பரவியிருக்கும்,
புல்வெளிக்கு....
கண்ணீர் வடிகின்றனவே!
ஓ,
நிஜமான காதலர்களைக்
கண்ட,
ஆனந்தக் கண்ணீர் போலும்.
கண்ணே,
நீ வளர்ந்தது,
உன் பெற்றோர்காக....
மலர்ந்தது.......
எனக்காக மட்டுமே.
தொட்டுவிடும் தூரத்தில்தான்
அமர்ந்திருக்கின்றோம்.....
தொடவேண்டும் என்றும்
துடிக்கிறோம்...
ஆனாலும்,
கண்ணியம் காக்க
நடிக்கின்றோம்
இந்த நாளை
என்னால் மறக்கவே
முடியாது........
இன்று நான் அடைந்த
நிம்மதி,
இனி............
கிடைக்கவே கிடைக்காது......
எங்கிருந்தாய் நீ?
ஏன் என்னை
இத்தனை யுகம்
காக்க வைத்தாய்?
அத்தனை சுகத்தினையும்,
ஒரு பார்வையில்
என்னுள் நிறைத்தாயே....
என் நிறை தாயே.
வேறெப்படி,
சொல்ல முடியும்
உன்னை?
என்னை
உனக்கு எவ்வளவு
பிடிக்கும்,
என்பதை நான் அறிவேன்...
அதை,
நினைக்கும் போதெல்லாம்,
எனக்குள்ளே
நான் அழுவேன்....
என் தேவதை நீ?
என் தேவையும் நீ?
நீ மட்டுமே.....
உன் உச்சந்தலையை
முகர்ந்து.......
என் உள்ளங்கையில்
ஏந்தி,,,,,,,
உலகின் கடைசி
நாள் வரை.........
என் காதல்,
ஒரு சதவிகிதம்
கூட குறையாமல்.......
உன்னை தாங்கும்
நாட்களை,
நீ,
காண நேர்ந்தால்.......
சொர்க்கம்
அதுவென்று இனிதே....
நான்,
கண்மூடுவேன்.

very nice...
பதிலளிநீக்கு