ஏனிந்த கோபம்?
எதற்கிந்த சாபம்?
நீ கொண்டது
பொய் கோபமா?
இல்லை.....
எனை கொல்லும்
மெய் கோபமா?
எவ்வளவு தொலைவு
என் கால்கள்,
பயணிகின்றனவோ......
அவ்வளவு அருகில்
உன் நினைவுகள்........
எனக்குள்ளே,
ஜனித்திருக்கும்
என்பதை அறியமாட்டாயா?
சிறு வயதில்.......
சிறு வயதில்.......
கண்ணாமூச்சி விளையாட்டு,
மிகவும் பிடிக்கும்
என,
அடிக்கடி சொல்லியிருக்கிறாய்.
இன்று.......
என் கண்ணை கட்டி
சென்றிருந்தாலும் பரவாயில்லை........
கட்டு அவிழ்த்தேனும்,
உன்னை தேடி இருப்பேன்.
கண்ணை வெட்டி
சென்றுவிட்டாயே......
எட்டு மேல் எட்டு வைத்து......
உன்னை எட்டும்
வேளையில்.....
எட்டி உதைத்துவிட்டாயே.
மணல்திட்டில்.....
அமர்ந்து எழும்போதெல்லாம்......
ஒட்டிய மணலை,
உதறுவாய்........
ரசிப்பேன்.
நானும்
அந்த மணலாவேனென்று
எதிர்பார்க்கவில்லையடி.
தொடர்கதை படிக்கவே.....
பிடிக்காது என்பாய்.
பொறுமை இல்லை
என்பாய்.........
சிறுகதை தான்
அருமை,
சீக்கிரம் முடிந்துவிடும்
என்பாய்.
அப்போது புரியவில்லை
எனக்கு.
நான் மட்டும்
தொடர்கதையாய் இன்று.......

excellent.... short and sweet
பதிலளிநீக்குThanks a lot Sujatha....
பதிலளிநீக்குthodar kathayaga nee irupathal than ennavo...indru engaluku thodarthu kavithaikalai padaikerai.....
பதிலளிநீக்குsirukathaiyaga irudhu irudhal
"sinnam " illamal poi irupai...
unnai "thodar kadhai" aha akee sendru vita thozhli pola....
ipadiku
karthiga....
(inum ethir parpudan)
உங்கள் எதிர்ப்பார்ப்பை என்னால் இயன்ற வரை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்......
பதிலளிநீக்கு"Andha manalaavaenendru
பதிலளிநீக்குethir paarkavaeillaiyadee"
really good!
Thanks Kanagavalli....
பதிலளிநீக்கு