புதன், 5 அக்டோபர், 2011

உன்னைத் தொடர்ந்து...

எப்படி ஆகிவிட்டேன்
நான்.....
ஐந்து நிமிடம்
நண்பன் வரத்
தாமதமானாலும்.......
அத்தனைக்,
கெட்ட வார்த்தைகளில்
திட்டுவேன்....
இன்றோ.....
உன் வருகைக்காக,
பல,
மணித் துளிகள்
காத்திருக்கிறேன்.
உன் தந்தையின்,
பின்னால்...
பதுங்கிய பதுமையாய்,
நீ,
என்னைக் கடந்து,
செல்கிறாய்..
இரண்டே இரண்டு
விநாடிகள்தான்.....
இருபது கோடி
ஆயுள் சொர்க்கம்,
காண்கிறேன் நான்.

பள்ளிக்கு செல்கிறாய்....
உன் அண்ணன்,
துணையுடன்.
என் ஜென்ம கடமையென,
பின்தொடர்கிறேன் நான்.
ஓர பார்வை,
பார்க்கிறாய் நீ...
கோரப் பார்வை,
பார்க்கிறான் உன் அண்ணன்.
சட்டென கடந்து
செல்கிறேன் வேகமாக.
என் கண்ணாடியில்
தெரிகிறது,
உன் முகம் சோகமாக...
வேகம் குறைக்கிறேன்,
உன் அண்ணன்
முறைக்கிறான்.
அதற்கெல்லாம்.....
அசைகிறவனா நான்.
இரண்டு நிமிட
பயணம்...
அதுற்குள்ளாகவா
உன் பள்ளி
வரவேண்டும்....
ஏக்க பார்வையுடன்
உள் நுழைகிறாய்.
அந்த பார்வை
என்னுள்
முள்ளாய் நுழைகிறது.

மாலை நேரம்,
உன் தந்தை வருகிறார்..
நல்லவர் அவர்....
உன் பின்னால்
ஊர்வலமே வந்தாலும்,
அவர் கண்களுக்கு
தெரியாது.
நானும் ஊர்ந்து
வருகிறேன்.
அப்படி ஒரு சிரிப்பு
உன் முகத்தில்,
அடிக்கடி தடுமாறுகிறேன்
நான்.
காற்றில் பறக்கும்
தலை முடிகள்.......
அவ்வவ்ப்போது மறைகின்றன
உன் கண்களை...
அக்கணம்
என்னைகாணாமல்,
உன் முகம்,
காட்டும் உணர்ச்சி.....
அடடடா........
உலகத்தின் உன்னத
ஓவியனாலும் கூட.....
வரைதல் கடினம்.
தினமும் தொடரும்
இந்த தொடர்கதை.....
ஒவ்வொரு நாளும்
முதல் அத்தியாயம்தான்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக