வெள்ளி, 14 அக்டோபர், 2011

இதுவும் உன்னைப் பற்றியதுதான் ......


இன்னமும்....
ஏதேனும் மிச்சம்
இருக்கிறதா?
என் காதலின்
எச்சம்......
எங்கேனும்,
ஒட்டிகிடக்கிறதா?
அதெப்படி......
என்னை
யாரென்றே தெரியாததைப்
போன்ற ஒரு
பார்வை......
நீ உமிழ்ந்த 
வெறுப்பின் கங்குகள்......
என்,
உச்சி முதல் பாதம்
வரை.....
கொன்று போட்டு.....
போதாதென்று,
திரும்பவும் வந்து
கொத்தி போடுகிறதடி.
கடந்த காலத்தில்......
எதுவுமே,
நிகழாலததைப்  போல்...
என்னை,
கடந்து செல்கிறாய்.
ஜென்மம் பல.......
தொடர,
ஆசைப்பட்டதை......
ஒரே இரவில்,
எதை கொண்டு
அழித்தாய்?
ஐயோ.........
என் உணர்வுகளை,
பொய்யென்று
பழித்தாய்?
மழுங்கி போன
அறிவிற்கு....
நீ வரமாட்டயென
தெரிந்தாலும்,
தரித்திரம் பிடித்த
இதயத்திற்கு.....
புரிய மறுக்கிறதே.
உன் நினைவைவிட்டு
பிரிய மறுக்கிறதே.
சோகம் தரும்.....
நினைவுகள்தான்,
அது,
உன்னை பற்றியது
என்பதால்......
சுகம் தருகின்றன.
இந்த அனுபவம்.....
இதையும் தந்ததற்கு
உனக்கு என்
நன்றிகள்.
என்றேனும் ஒரு
விடியலில்.....
நீ கண்விழித்த போது...
உன் விழியோரம்,
ஒரு துளி
காய்ந்து கிடக்கும்.....
அது நான்தான்
என்பதை.....
அன்றேனும்
புரிந்துகொள்.

4 கருத்துகள்: