யாரது,
என்னை பாதி
உறக்கத்தில் எழுப்பி........
என் தலைமுடியை
ரசிப்பது?
கண்ணைக் கவரும்
பாடல் ஒன்று......
தொலைக்காட்சியில்
ரசிக்கிறேன்..
நடு நடுவே.......
திரையிலிருந்து எட்டிப்
பார்த்து,
என் நெஞ்சை
தொட்டு செல்வது
யாரது?
வேலை செய்யப்
பிடிக்காமல்,
வெட்டியாக...........
அமர்ந்திருக்கும் நேரத்தில்,
என் காதருகே வந்து
ரகசிய சுவாசம்
விட்டு செல்வது,
யாரது?
நண்பர்கள் அரட்டைக்கு
இடையிடையே
என் இடுப்பை....
வெடுக்கென்று,
கிள்ளி செல்வது
யாரது?
ஏதோ ஒரு
திருமண வரவேற்பில்,
என் கையில்
கொடுத்த ரோஜாவில்.......
வேறு இதழ்
தெரிகிறதே.........
யாரது?
வண்டியில் தனியாக
செல்லும்
போதெல்லாம்.....
இறுக்கமான அணைப்பு
உணர்கிறேனே,
யாரது?
இருளில் தொலையும்போதெல்லாம்,
என் முன்னே..
ஒளி ஒன்று
தவழ்கிறதே.....
யாரது?
இப்படி என்னை.....
பைத்தியம் போல்
புலம்ப வைத்து.......
ஒன்றும் தெரியாதவள்
போல்,
எங்கோ நின்று
விளையாடுவது.......
யாரது?

wow wow wow... yaar than athu ?????? :)
பதிலளிநீக்குnice words.... candle with water flame is amazing!
பதிலளிநீக்குThanks Sujatha...ithu oru pothuvaana karpanai...ellor manathilum thondruvathuthaan..
பதிலளிநீக்குThanks a lot kanagavalli..
பதிலளிநீக்கு