செவ்வாய், 11 அக்டோபர், 2011

யாரடி நீ?

யாரடி நீ?
என் இருபத்தொன்று,
வருட சேமிப்பை.....
இரண்டே வினாடியில்,
இரு விழியால்
களவாடிவிட்டாயே......
வானம் தந்த
தேவதையா?
வனம் தந்த
மோகினியா?
தென்றல் சேர்த்த
மகரந்தமா?
இயற்கை வெட்கும்
அளவில்லா அழகா?
ஈசன் மீதி வைத்த
ஆலகால விஷமா?
இல்லை.....
என் தாய்க்கு
ஈடான....
இன்னொருப் படைப்பா?
யாரடி நீ?

தாகம் என்கிறேன்...
நெருப்பை தருகிறாய்.
தயங்காமல்
குடிக்கிறேன்.....
இன்னமும்
கேட்கிறேன்!
என்னை வளைத்து
என் நரம்பை
ஏற்றி......
கீதம் இசைக்கிறாய்.
சுகமான
உயிர் வலி.........
உன்னுடன் சேர்ந்து
நானும்,
இசைக்கிறேன்.........

என்னை,
விழுங்கின........
உன் விழிகள்.
மூச்சு திணறி
கதறுகிறேன்.....
என்னை
வெளியே விடு
கெஞ்சுகிறேன்.
"அவ்வளவு சீக்கிரம்
விடுவேனா"
கொஞ்சுகிறாய்.
கருவறையின் சத்தம்....
உன்னருகில் இருந்தால்
கேட்கிறேன்.
கல்லறையின் நிசப்தம்
நீ இல்லாதபோது
உணர்கிறேன்.
எத்தனை கொடுமைகள்
சிரித்து கொண்டே
செய்கிறாய்.....
சிதைந்து கொண்டே
ரசிக்கிறேன்.
இயற்கை வெட்கும்
அளவில்லா அழகா?
ஈசன் மீதி வைத்த
ஆலகால விஷமா?
இல்லை.....
என் தாய்க்கு
ஈடான....
இன்னொருப் படைப்பா?
யாரடி நீ?

1 கருத்து: