திங்கள், 17 அக்டோபர், 2011

இதயத்தின் கூக்குரல்..........



கண்ணே,
உன்னருகில் இருந்தபோது 
என்னால்
எதுவுமே யோசிக்கமுடிந்ததில்லை.
உன்னை பிரிந்திருக்கும்
நேரத்தில்.......
உன்னை தவிர
வேறு எதையும்
யோசிக்க விரும்பவில்லை.

என் முகம்....
ஏன் நனைந்தது?
ஓ!
மழை சாரலை......
உன் கையால்
சிதறடித்து,
விளையாடி கொண்டிருப்பாய்.
என் முகம்......
ஏன் நனைகிறது?
ஓ!
மழை வீதியில்.......
உன் துணைவனுடன்,
உறவாடி சென்றுக் கொண்டிருக்கிறாயா?

இருள் நேரம்,
இடி இடித்தது........
மின்னலென என்னிடம்,
அடைக்கலமானாய்.
இருண்ட காலம்,
மின்னலென
விடைபெற்றாய்....
என்னுள் 
இறங்கிய இடி........
ஆழமாக ஊடுருவி செல்கிறது...
ஊடுருவி கொல்கிறது.

என் மௌனம்,
நீ ரசித்த.......
சுகமான சங்கீதம்......
நீ கூற
நான் ரசித்திருக்கிறேன்.
உன் மௌனம்,
நான் துடிக்கும்......
வேதனை கதறல்.......
உள் அலறி
நசிந்துகொண்டிருக்கிறேனடி.

நான் மனம்
நொந்தபோதேல்லாம்.........
ஓடி வந்து,
புனலாய் குளிர்விப்பாய்.
என் வனம்
வெந்துக்கொண்டிருக்கிறது.......
விலகி நின்று,
கனலாய் எரிக்கிறாயே.

நான் கொடுத்த.....
வெற்று காகிதங்களை
கூட,
பொக்கிஷமென
பாதுகாத்து வைத்தாய்........
நீ தூக்கி
எறிந்த,
வெத்து காகிதம்.........
நான்தான் என்பதை,
தாமதமாக
புரியவைத்தாயடி.

விரல்கள் 
உரசியும் 
உரசாமல்........
தோள்கள்
இடித்தும்
இடிக்காமல்......
நடக்க பயின்றேனே,
இந்த நடைபாதையில்
உன்னுடன் நான்.
விரல்கள்
செயலிழந்து,
தோள்கள்
மரத்து........
நடைபிணமாய்
இதே நடைபாதையில்
இன்று
நான் மட்டும்.



2 கருத்துகள்: