சனி, 15 அக்டோபர், 2011

அழுகிறேன் நான்.......



மறந்துவிட்டாயா?
நம் முதல் சந்திப்பை......
இதய பரிமாற்றத்தை.
விழி மூடி.......
முகம் மறைத்து,
அமர்ந்த உன்னை....
விதி மீறாமல்.......
மெல்ல தழுவியபோது,
சிலிர்த்த உன்.....
ரோமங்கள்,
என்
அத்தனை வருட....
பாவத்துக்கு,
விமோசனம் தந்தனவே.

வலிக்காமல்
உன் மடியில்,
தலை சாய்த்ததும்,
வலிய.......
நீ என் மேல்
சாய்ந்ததும்........
சூழ்நிலை மறந்த
பொழுதுகள்,
இன்னமும்.....
என்னை,
சுற்றி வளைத்த
முள் விழுதுகள்.

என் சாத்தான்
என்னை
தூண்டியபோதும்,
என் விழிகோடுகள்
உன் முகத்தை
தவிர,
வேறெங்கும் தாண்டியதில்லை.
விதி தீண்டிய
காரணமா?
சதி அண்டிய
தோரணமா?
தெரியவில்லை.
என் தெய்வம்.....
நான் கதறி
வேண்டியபோதும்,
என்
முகம் அறைந்து
சென்றுவிட்டது.


இதோ....
மீண்டும் வந்திருக்கிறேன்,
நம்
முதல் சந்திப்பு.......
நிகழ்ந்த இடத்திற்கு.
அதோ.....
அந்த மரத்திற்கு
பின்னாலிருந்து,
எட்டி பார்க்கமாட்டாயா?
படகின் மறைவிலிருந்து
கைதட்டி அழைக்கமாட்டாயா?
விழி மூடி
முகம் தொலைந்து
அமர்கிறேன் நான்.
அழுகிறேன் நான்.......
வழுக்கிய கண்ணீரில்,
முகம் மலர்ந்து
சிரிக்கிறாய் நீ.




5 கருத்துகள்: