கண்ணீர் துளிகள்
இமை தாண்டும்
முன்பே.......
இரு கையில்
ஏந்திய நீயா............
இன்று,
கடலில் மூழ்குவதைக் கண்டு....
கைக்கொட்டி ரசிப்பது.
சிறு கீறல் பார்த்து
கதறி அழுத
நீயா......
இன்று,
கழுத்து அறுப்பட்டு.....
துடித்த வேளையிலும்,
உதறி செல்வது.
இறுதி வரை.....
உடன் வருவேனென்று
சொன்ன நீயா........
இன்று,
என் இறுதியாத்திரைக்கு
நாள் குறித்து
சொல்வது.
உன் பேருக்குப்
பின்னால்,
என் பேர் எழுதி.....
பூரித்த நீயா.......
இன்று,
நான் மரித்த
புழுதியை....
பார்ப்பதும் பாவமென்று,
சொல்லி திரிவது.
என் தோள்கள்...
நீ ஓய்வெடுக்கும்
கிளைகள்....
ஒரு மழைநாளில்
பிதற்றிய நீயா........
இன்று,
வேரோடு சாய்ந்த
என்னை....
விளையாட்டாய்,
தாண்டி செல்வது.
உலகின் அத்தனை...
இன்பத்தினை,
தந்த நீ,
இன்று.......
பிரபஞ்சத்தின் அத்தனை...
வேதனைகளையும்,
நான் அனுபவிக்க
ஆசைப்படுகிறாய்.
உன் ஆசைப்படியே.....
வாழ்வதை,
தவமாகக் கொண்டவன்
நான்,
என்பதை.......
நீ உணராவிட்டாலும்.....
உயிரின் கடைசி
துகள்......
கருகும் வரையிலும்.....
உன்னை மறவாமல்
இருப்பேனடி......
இறப்பேனடி........

Everyday commenting ur excellent poetic lines and to express the awesomeness of the art piece becomes difficult. SO if I really find difficult for right words to praise, I am going to use rating stars upon 5 stars. So poor is our vocabulary and so lot is ur poems n art....he! he! he!
பதிலளிநீக்குPoem : ***** (5/5)
art : ***** (5/5)
nice
பதிலளிநீக்குவழக்கம் போல் சுருக்கமா....அழகா....கருத்து தெரிவித்த சுஜாதாவிற்கு நன்றி.
பதிலளிநீக்குஇதற்காகவே இன்னமும் சிறப்பாக......அழகாக எழுத முயற்சிக்கிறேன் கனகவல்லி.....உங்கள் ஆதரவு இதே போல் தொடர வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குPls do not mention Gowrishankar!
பதிலளிநீக்குaeram karuthukal pothendha aburvamay.......
பதிலளிநீக்குpadangal ayeram pesina....
un kavithaikal palariam pesina...
innum thodaratum un iniya kavithaikal....
irakamal irundhu vidatum....
ipadiku
anbu thozhli
karthiga
மிக்க நன்றி கார்த்திகா....உங்களை போன்று ஊக்கம் தருபவர்கள் இருக்கும் வரை,என் எழுத்து பயணம் தொடரும்.
பதிலளிநீக்கு