இன்னமும் மறக்கவில்லை,
நீ,
விட்டு சென்ற நாளை,
வெட்டி சென்ற நாளை,
ஏன் வெறுத்தாய்
என்னை....
சிந்தித்து சிந்தித்து
சிலையானேன்....
என்னையே,
நிந்தித்து நிந்தித்து
ஜடமானேன்.....
ஆறவில்லை நீ
சுட்ட வடுக்கள்.
காயவில்லை
கண்ணீர் மடுக்கள்....
சிறகு விரித்த
சமயம்.......
சிலுவையை சமர்ப்பித்தாயே.
சருகென கிடந்தாலும்,
உன் கால்தடத்திற்கு.....
தவம் கிடந்தேனே,
நீ வருவாயென.......
நீ வரவேண்டும்...
உன் வரம் வேண்டாம்...
சாபமேனும் கொடு.
உன்னை
என்னைத்தவிர,
வேறு எவரால்
புரிந்து கொள்ளமுடியும்?
என்னை
நீ புரிந்துக்கொள்ளவில்லை
என்றால்?
வேறு யார்
புரிந்துக்கொண்டுதான்
எனக்கென்ன பயன்.
என்னையே கிழித்துகொள்கிறேன்,
அழித்து கொள்கிறேன்,
ரத்தம் வருகிறது,
வரட்டும்.......
வலிக்கிறது.......
நீ விட்டு சென்றதை
விட அல்ல....
நீ உணரமாட்டாய்.....
உணர தேவையில்லை,
சாதிக்க பிறந்தவள்
நீயா?
தெரியாது.......
சாகடிக்கப் பிறந்தவள்
என்பதை,
நான் உணர்கிறேன்...
ஒன்று சேர்ந்த
காதல்கள்......
வெறும் கதைகள்.....
சேரா காதல்களே
காவியங்கள்....
நம் காதலையும்
காவியமாக்கியதற்கு
மிக்க நன்றி.
"உங்கள் வார்த்தையில்,வைரமுத்து,வாலி
சாயல் தெரிகிறதே".
சிலர் விமர்சிக்கிறார்கள்.....
அதனாலென்ன,
உன்னுடைய தழுவல்தான்
பொய்யாகிப்போனது,
என்னுடைய தழுவல்
நிஜத்தை சொல்லட்டுமே.

Cheer up gowri... pothum sooga kavithaigal. there is lots of other feelings in love, other than waiting and crying. why not you try some cheerish love kavithai? awaiting eagerly pls...
பதிலளிநீக்கு