நீ வேண்டும்.....
ஒரே ஒரு
முறையாவது,
நீ வேண்டும்.
என் நிலையில்
நீ வேண்டும்.......
நீ நான்
ஆக வேண்டும்.
வாழ்ந்து கொண்டே
சாவதையும்,
செத்து கொண்டே
வாழ்வதையும்
அதையும்,
வலித்தவாறே
ரசித்து
அனுபவிப்பதையும்
உணர வேண்டும்..
நஞ்சை உமிழ்ந்து
சென்றாலும்,
அமுதமென நெஞ்சில்
சேமித்து
வைத்திருப்பதை,
நினைத்து
ஏங்க வேண்டும்......
மெய்யென
நினைத்த காதல்,
பொய்யென்று
உரைத்து சென்றாலும்,
உயிர்மெயென
உறைந்திருப்பதை
அறிய வேண்டும்.
எவ்வளவு தொலைவில்
தூக்கி எறிந்தாலும்,
சுவரில் பட்ட
பந்து போல்
திரும்ப திரும்ப
உன்னை நினைப்பதை
காண வேண்டும்.....
கண்ணில் ஒரு
கண்ணில் ஒரு
துளி நீர்,
தவறி தெறித்தாலும்
அது உன்னுள்,
கறைய வேண்டுமென,
உயிரும் புலம்புவதை
கேட்க வேண்டும்.
காதல் இல்லையென்று,
வெட்டி
சென்றாலும்,
இன்னமும் உன்
விதையின்
நிழலில்
துளிர்த்து கிடப்பதை
காண வேண்டும்.
நீ வேண்டும்.....ஒரே ஒரு
முறையாவது,
நீ வேண்டும்.
என் நிலையில்
நீ வேண்டும்.......

When I saw the first line... I expected something else... But the way of expressing ur feel is vry diffrent. வாழ்ந்து கொண்டே
பதிலளிநீக்குசாவதையும்,
செத்து கொண்டே
வாழ்வதையும்
அதையும்,
வலித்தவாறே
ரசித்து
அனுபவிப்பதையும்
உணர வேண்டும்... this line is excellent.A real pain.
Thanks Sujatha
பதிலளிநீக்குU r wlcm
பதிலளிநீக்கு