புதன், 7 செப்டம்பர், 2011

இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்......



எப்போது ஏற்பட்ட 
மாற்றம்  இது.........
எதனால் நிகழ்ந்த
மாற்றம் இது........
நல்ல  காலம்
பார்த்து வந்ததா?
கெட்ட காலம்
கேட்காமல் வந்ததா?
நிலைத்து நிற்குமா?
நிலைகுலைத்து விடுமா?
கடவுள் வாழ்த்த
வாழ்வு தொடங்குமா?
இல்லை,
கானலில் சிக்கிய
கனவாக முடியுமா? 



என் சுமையையே
நான் வெறுத்தபோது,
உன் சுமையும்
சேர்ந்து சுமக்கின்றேனே?
"மறந்துவிடு" என்ற
சொல்லை,
மறக்காமல் சொல்லி
சென்றாய்.......
"இறந்துவிடு" என்று
சொல்லியிருந்தால்.
மறுக்காமல்,
செய்திருப்பேனே....
மனம் மாறி வருவாயென
மானம் கெட்டு காத்திருந்தேன்,
வனம் போகும் ,
காலம் வரை-
உன் சினம்
தணியுமா?
புரியவில்லை.

கட்டிலில் புரளும் 
போது,
கண்டதை சிந்திப்பவளே,
கண்மூடி,
ஒரு வினாடி......
என்னை நினைத்து
பார்.
நிழலின் வாயசைவை
நம்பி,
என்னை நிராகரித்த 
உண்மை,
உனக்கு  புரியும்.
இன்னமும் கேவலமாக,
நினைத்தாலும்
சரி.........
என் கோவிலின்
தெய்வமென,
நீ இருக்கிறாய்.
என் கேள்வியின்,
வேள்வியில்.....
நான்,
தினம் தினம்
எரிந்தாலும்........
மரித்துப் போன,
நம் காதலின்
ஜோதியாக,
திரிவேன்.




1 கருத்து: