வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

எனக்கே எனக்காக ஒரு தோழி


எனக்கொரு
தோழி,
எனக்கு மட்டும்
அவள் தோழி.
கள்ளம் இல்லா
பேச்சால்,
என் உள்ளம்
நிறைந்தவள்.....
இடிந்த சுவரில்
வண்ணம்
வரைந்தவள்..
நிறைய பேசுவாள்...
நிறைவாக பேசுவாள்...

நேற்றைய மழையில்
முளைத்த காளான்
அல்ல அவள்...
கால சுழலில்,
என் கரை
ஒதுங்கிய 
கலன் அவள்....
தங்க பதுமை 
அவள்...
பெண் இனத்தில்
புதுமை அவள்.
கொஞ்சம் கோபப்படுவாள்..
கொஞ்சம் வெட்கப்படுவாள்..
கொஞ்சம் வேதனைப்படுவாள்...
கொஞ்சம் சிணுங்குவாள்...
கொஞ்ச,கொஞ்ச.....
குழந்தையாவாள்.

என்னுள் விழுந்த 
துளி அவள்.
முத்தாக பாதுகாக்கிறேன்...
என் மழைக்காலம்,
அவள் கிளையில்
கடந்து செல்லும்...
என் வெயில்காலம்,
அவள் குடையில்
நகர்ந்து  செல்லும்..
இன்னும் சொல்ல
முடியா வார்த்தைகள்
முடிவு பெறாமல்
காற்றோடு கரைந்து
செல்லும்.....

1 கருத்து: