ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

சுதந்திர தின Special

நான் சொல்வேனடா.......
நான்கு தலைமுறைக்கு,
சொத்து சேர்க்க-
நன்றி கெட்ட பிண்டமாக,
நாட்டில் பவனி வரும்
மாமிசமே.........
நாளைய நாளில்
நாடி அடங்கி,
நாறி கிடக்கும் வேளையிலே......
நரகத்தின் கட்டில்,
நடனமாடியவாறு
உன்னை வரவேற்க
காத்திருக்கும்,
என
நான் சொல்வேனடா.

எத்தனை பேர் கண்ணீர்.........
அத்தனையும் உன்
சந்ததியினருக்கு.........
நீ சேர்க்கும்
பாவ மூட்டைகள்.
கண்ணில் படுவதையெல்லாம்
களவாட துடிக்கும்
நீ,
மண்ணில் புதைந்தபோது
புழுவாட கிடப்பாய்,
என,
நான் சொல்வேனடா.......

ரத்தம் சிந்தி,
சுத்தம் செய்த நாட்டை,
உம் போன்ற,
எச்சில் கையில்
சீரழிய விடுவோமா?
அங்கே பாரடா........
பித்தம் தெளிந்த
எம் மக்கள்,
நாத்தம் பிடித்த
வல்லூறு உம்மை,
கொத்தி குதற
வேங்கை என சீறி
வருகிறார்கள்,
என,
நான் சொல்வேனடா......

உத்தமர் வாங்கிய
சுதந்திரம்,
தரித்திரர் கையில்,
சிக்கி கிடக்கும்
அவலத்தை,
என்னவென்று சொல்வது?
கொள்ளை அடிக்கும்
திருடர் உம்மை,
கொல்லையில் கிடத்தும்
நாள்,
வெகு தொலைவில் இல்லை
என,
நான் சொல்வேனடா......

என் இளைஞன்,
தூங்குவதாக நினைத்து,
ஜனநாயகத்தை,
தூக்கிலிடும் ஜந்துகளே,
கண்ணிமைக்கும் நேரத்தில்,
உம்மை நாற்சந்தியில்
நார் நாராக கிழித்து,
தொங்கவிடும் காலம்,
இதோ,
என் கண்ணில் தெரிகிறது
என 
நான் சொல்வேனடா.....
உறக்கத்திலும் சொல்வேனடா.....
உரக்க சொல்வேனடா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக