அந்த பைக் சுமாராக 80 லிருந்து 100 கிமீ வேகத்தில் மலைப்பாதையில் இறங்கி கொண்டிருக்கிறது.
அவள்: hey மெதுவா போ எனக்கு பயமா இருக்கு.
அவன்:cool, எல்லாம் ஒரு ஜாலிக்குதான்.
அவள்: இதுக்கு பேர் ஜாலியா?எனக்கு ரொம்ப பயமா இருக்கு.
அவன்: அப்ப i love you ன்னு சொல்லு.
அவள்: i love you
அவன்: கேக்கலை.
அவள்: (சத்தமாக) i love u.இப்பயாவது வண்டியை slow வா ஓட்டு.
அவன்: சரி என்னை இருக்கமா கட்டிபிடி.
(இறுக்கமாக கட்டிக் கொள்கிறாள்).
அவன்: என் helmet டை எடுத்து நீ மாட்டிக்கிறியா? ரொம்ப uneasy யா இருக்கு?
(அடுத்த நாள் காலை newspaper ரில் ஒரு ஓர செய்தி.Two wheeler brake பிடிக்காத காரணத்தினால் மலை பாதையில் விபத்து.பயணம் செய்த இருவரில் ஒருவர் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.லேசான காயங்களுடன் இளம்பெண் ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.)
கொஞ்சம் பொறுங்க ஒரு முக்கியமான உண்மைய தெரிஞ்சிக்க வேணாமா.
வண்டி brake பிடிக்காத உண்மை பாதி தூரத்திலேயே அவனுக்கு தெரியும்.அவளிடம் அவன் அதை சொல்லவில்லை.மாறாக அவள் அவனை காதலிப்பதையும் ,கட்டியணைப்பதையும் நிறைவேற்றிக்கொண்டு தன் helmet டை அவள் அணிய செய்தான்.ஒரு வேளை அவனுக்கு ஏதேனும் நேர்ந்தாலும்,தன் காதலிக்கு எதுவும் நேரக்கூடாது என நினைத்து அப்படி செய்தான்.
இப்ப அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சிங்க, Foreign ல settle ஆயிடிச்சு.அதுக்கு நாலு வயசுல ஒரு பையன் இருப்பதாகவும், அவனுக்கு தன் காதலன் பெயர் வைத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக