உன்னை எனக்கு
மிகவும் பிடித்தது,
அதனால் என்னை
மன்னித்துவிடு.
என்னை பிடித்தும்,
பிறகு பிடிக்காமல் போன
உன்னையும்,
மன்னித்து விட்டேன்.
உன்னை தொலைத்து
விட்டேன்.
அதனால் என்னை
மன்னித்துவிடு.
தொலைவதற்காகவேக் காத்திருந்த,
உன்னையும்,
மன்னித்துவிட்டேன்.
உன் பெயர்
சொல்லியே,
இதயம் துடித்தது.
என்னை மன்னித்துவிடு.
உன் காதில்
விழுந்தும்,
கசக்கியெறிந்த
உன்னையும்,
மன்னித்துவிட்டேன்.
உனக்கு பிடித்த
விளையாட்டெல்லாம்,
எனக்கும் பிடித்தது.
என்னை மன்னித்துவிடு.
என் உணர்வோடு
விளையாடி சென்ற,
உன்னையும்,
மன்னித்துவிட்டேன்.
உன்னை தலையில்
கிரீடம் என-
வைத்து கொண்டாடினேன்.
என்னை மன்னித்துவிடு.
குப்பையில்,
வீசி சென்ற
உன்னையும்,
மன்னித்துவிட்டேன்.
உன்னை நினைத்து,
கனவுகளும்,
இலட்சியங்களும்,
சேமித்திருந்தேன்.
என்னை மன்னித்துவிடு.
ஒரு வினாடியில்,
பொசுக்கி சென்ற
உன்னையும்,
மன்னித்துவிட்டேன்.
உன்னை எண்ணி,
தெரு தெருவாக-
பைத்தியம் போல்
திரிந்திருக்கிறேன்.
என்னை மன்னித்துவிடு.
எல்லாம் தெரிந்தும்,
அமைதியாகவே,
இருந்துவிட்ட,
உன்னையும்,
மன்னித்துவிட்டேன்.
என் கண்ணாடி
சுவர் முழுவதும்,
உன் பெயரையே,
கிறுக்கியிருந்தேன்.
என்னை மன்னித்துவிடு.
கண்ணிமைக்கும் பொழுதில்,
நொறுக்கி சென்ற,
கிறுக்கி,
உன்னையும் மன்னித்துவிட்டேன்.
கடைசியாக,
காலமெல்லாம் உன்னுடன்,
வாழ நினைத்தேன்.
என்னை மன்னித்துவிடு.
காலமே அழிந்தாலும்,
என் திசை வர-
வெறுத்த,
உன்னையும் மன்னித்துவிட்டேன்.
மன்னித்துவிடு.
மன்னித்துவிட்டேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக