ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

அந்த நாள்,அந்த நிமிடம்,அந்த நொடி..........

நானும் என் மனைவியும் அறையை சுத்தம் செஞ்சப்போ,என் பழைய Diary கெடச்சது, எடுத்து பாத்தா ,ஆகா ........உச்சக்கட்ட சோகத்துல நான் கிறுக்கியது எல்லாம் அதுல இருந்திச்சி.இன்றைய தேவ(லூசு)தாசுங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.



உன்னை சந்தித்த,
அந்த நாள்......
அந்த உணர்வு.....
அந்த பகிர்வு.......
நீ மட்டுமே,
எனக்கானவள்
என,
முடிவான தருணம்.
எல்லாமே,
ஒரு நிகழ்வாக
நிகழ்ந்தது.
கனவாக முடிந்தது.

நீ
கிடைத்தது மிக,
அரிது.
அதனால்தான்,
என் காதல்,
எனக்கு மிக மிக
பெரிது..............
என நினைத்தேன்.
நம் சந்திப்பு,
நிகழ்ந்திருக்காவிட்டால்,
என் காதலும்,
நிராகரிக்கப்பட்டிருக்காது.
அழுவதால்,
நீ வரப்போவதுமில்லை.
திரும்ப,
என்னை தரப்போவதுமில்லை.

காற்றில் கரைந்த,
நம் வார்த்தைகள்,
என்,
சுவாசத்திலும் அல்லவா
நுழைந்துவிட்டன.
வெளிவரத்தெரியாமல்,
இதயத்தில் எதிரொலித்து,
என்னை.......
சுக்குநூறாக்குவதை,
நீ,
உணரமாட்டாய்.
உணர தேவையில்லை.
இந்த,
நரக வேதனையை,
நான் ரசித்து
அனுபவிக்கிறேன்.
ஏனென்றால்,
அது ஞாபகப்படுத்துவது
உன்னையல்லவா.

கடந்த காலம்,
திரும்ப நிகழ்ந்தால்......
உன் புரிதலுக்கு
உடையவனாக இருப்பேன்.
இல்லையென்றால்,
உன்னை மறுத்திருப்பேன்.
இப்படி 
என்னையே வெறுத்திருக்கமாட்டேன்.
உன்னில்
தொலைந்த என்னை,
தேடிக்கொண்டிருக்கவும் மாட்டேன்.

என்னவாயிற்று
இவனுக்கு?
ஏன்
இப்படி திரிகிறான்?
பெற்றோர் கலக்கம்,
கண்களுக்கு தெரிகிறது.
இதயத்துக்கு புரியவில்லை.
இருந்தால்தானே
புரியும்.
அது உன்னிடமும்
இல்லை.
தூக்கி எறிந்த
நீ,
நிம்மதியாக
உறங்கி கொண்டிருப்பாய்.
தூர விழுந்த
அது,
எங்கேனும் இருளில்
உன் பேர் சொல்லி,
பிதற்றிக்கொண்டிருக்கும்.

ஒரு
பனி காலத்தில்,
கரம் கோர்த்தவாறு-
நீண்ட தூரம் நடந்த
அந்த நாள்,
என் தோள் சாய்ந்த
அந்த நேரம்,
உன் மடி தூங்கிய
அந்த நிமிடம்,
நீ கண்ணீர் சிந்திய
அந்த நொடி...........
கடவுளே 
போதும்..........
அது போதும்.........
கல்லறையில்,
மூடிய போதும்.........
கண்ணிமைக்குள்......
அந்த இடங்கள்
சொர்க்கமென காட்சியளிக்கும்.


1 கருத்து: