வியாழன், 20 அக்டோபர், 2011

அந்த கோயில்......அந்த மரம்......



பிறிதொரு நாள்,
பிரிந்த ஒரு நாள்.....
மீண்டும்
அந்த கோயிலுக்கு
சென்றிருந்தேன்.
நான் மட்டும்.....
கல்லாய் நின்ற
தெய்வம்......
இன்னமும்,
கண் திறந்து
சிரித்துக் கொண்டிருக்கிறார்.
நீ கேட்டால்
உடனே வரம் தரவேண்டுமா....
அந்த பார்வை
எனக்கு சொல்லிற்று.
யார் சொல்லி
அவருக்கும் தெரிந்தது,
கானலாய் போன
என் காதல்.
வணங்க தோன்றவில்லை...
முனகி விட்டு
திரும்பினேன்.

அந்த மரம்
கண்ணில் பட்டது.....
பெருகிய கண்ணீர்
என்னை
மேலும் சுட்டது.
நான் விரும்பாதபோதும்
என் கால்கள்,
சூன்யம் வைத்ததை போல்
எனை இழுத்து
சென்றன....
நின்றன.
தரைமேல் எழும்பி.....
கிளைபரப்பிய வேர்கள்....
அமர்கிறேன்.
இங்குதானே......
என் விரலுக்கு
சொடுக்கெடுத்தாய்.
காற்றில் உனை
தேடும் விரல்கள்......
காணாமல்,
கதறி அழுவதை
நன்கு உணர்கிறேனடி..

என்னவாயிற்று எனக்கு?
ஏன் இன்னமும்
இங்கு அலைகிறேன்.
நீ இல்லை.....
என்பதை இதயம்
ஒவ்வொரு துடிப்பினில்
உணர்த்தினாலும்......
வருவாயா?
வருவாயா?
என.......
விழிகள்
விக்கித்து நிற்கின்றன.
அடிவயிற்றில் அலையும்
அமில பந்துகள்,
என்
உயிர் மூச்சை
நிறுத்த துடிக்கின்றன.
இந்த 
கொடும்வலியிலிருந்து......
விமோசனமே
கிடையாதடி......
உன்னை
மறக்கவும்
முடியாதடி.

புதன், 19 அக்டோபர், 2011

நான் மட்டும் தொடர்கதையாய்.......


ஏனிந்த கோபம்?
எதற்கிந்த சாபம்?
நீ கொண்டது
பொய் கோபமா?
இல்லை.....
எனை கொல்லும்
மெய் கோபமா?
எவ்வளவு தொலைவு
என் கால்கள்,
பயணிகின்றனவோ......
அவ்வளவு அருகில்
உன் நினைவுகள்........
எனக்குள்ளே,
ஜனித்திருக்கும்
என்பதை அறியமாட்டாயா?


சிறு வயதில்.......
கண்ணாமூச்சி விளையாட்டு,
மிகவும் பிடிக்கும்
என,
அடிக்கடி சொல்லியிருக்கிறாய்.
இன்று.......
என் கண்ணை கட்டி
சென்றிருந்தாலும் பரவாயில்லை........
கட்டு அவிழ்த்தேனும்,
உன்னை தேடி இருப்பேன்.
கண்ணை வெட்டி
சென்றுவிட்டாயே......
எட்டு மேல் எட்டு வைத்து......
உன்னை எட்டும்
வேளையில்.....
எட்டி உதைத்துவிட்டாயே.

மணல்திட்டில்.....
அமர்ந்து எழும்போதெல்லாம்......
ஒட்டிய மணலை,
உதறுவாய்........
ரசிப்பேன்.
நானும் 
அந்த மணலாவேனென்று
எதிர்பார்க்கவில்லையடி.
தொடர்கதை படிக்கவே.....
பிடிக்காது என்பாய்.
பொறுமை இல்லை 
என்பாய்.........
சிறுகதை தான்
அருமை,
சீக்கிரம் முடிந்துவிடும்
என்பாய்.
அப்போது புரியவில்லை
எனக்கு.
நான் மட்டும்
தொடர்கதையாய் இன்று.......







திங்கள், 17 அக்டோபர், 2011

இதயத்தின் கூக்குரல்..........



கண்ணே,
உன்னருகில் இருந்தபோது 
என்னால்
எதுவுமே யோசிக்கமுடிந்ததில்லை.
உன்னை பிரிந்திருக்கும்
நேரத்தில்.......
உன்னை தவிர
வேறு எதையும்
யோசிக்க விரும்பவில்லை.

என் முகம்....
ஏன் நனைந்தது?
ஓ!
மழை சாரலை......
உன் கையால்
சிதறடித்து,
விளையாடி கொண்டிருப்பாய்.
என் முகம்......
ஏன் நனைகிறது?
ஓ!
மழை வீதியில்.......
உன் துணைவனுடன்,
உறவாடி சென்றுக் கொண்டிருக்கிறாயா?

இருள் நேரம்,
இடி இடித்தது........
மின்னலென என்னிடம்,
அடைக்கலமானாய்.
இருண்ட காலம்,
மின்னலென
விடைபெற்றாய்....
என்னுள் 
இறங்கிய இடி........
ஆழமாக ஊடுருவி செல்கிறது...
ஊடுருவி கொல்கிறது.

என் மௌனம்,
நீ ரசித்த.......
சுகமான சங்கீதம்......
நீ கூற
நான் ரசித்திருக்கிறேன்.
உன் மௌனம்,
நான் துடிக்கும்......
வேதனை கதறல்.......
உள் அலறி
நசிந்துகொண்டிருக்கிறேனடி.

நான் மனம்
நொந்தபோதேல்லாம்.........
ஓடி வந்து,
புனலாய் குளிர்விப்பாய்.
என் வனம்
வெந்துக்கொண்டிருக்கிறது.......
விலகி நின்று,
கனலாய் எரிக்கிறாயே.

நான் கொடுத்த.....
வெற்று காகிதங்களை
கூட,
பொக்கிஷமென
பாதுகாத்து வைத்தாய்........
நீ தூக்கி
எறிந்த,
வெத்து காகிதம்.........
நான்தான் என்பதை,
தாமதமாக
புரியவைத்தாயடி.

விரல்கள் 
உரசியும் 
உரசாமல்........
தோள்கள்
இடித்தும்
இடிக்காமல்......
நடக்க பயின்றேனே,
இந்த நடைபாதையில்
உன்னுடன் நான்.
விரல்கள்
செயலிழந்து,
தோள்கள்
மரத்து........
நடைபிணமாய்
இதே நடைபாதையில்
இன்று
நான் மட்டும்.



சனி, 15 அக்டோபர், 2011

அழுகிறேன் நான்.......



மறந்துவிட்டாயா?
நம் முதல் சந்திப்பை......
இதய பரிமாற்றத்தை.
விழி மூடி.......
முகம் மறைத்து,
அமர்ந்த உன்னை....
விதி மீறாமல்.......
மெல்ல தழுவியபோது,
சிலிர்த்த உன்.....
ரோமங்கள்,
என்
அத்தனை வருட....
பாவத்துக்கு,
விமோசனம் தந்தனவே.

வலிக்காமல்
உன் மடியில்,
தலை சாய்த்ததும்,
வலிய.......
நீ என் மேல்
சாய்ந்ததும்........
சூழ்நிலை மறந்த
பொழுதுகள்,
இன்னமும்.....
என்னை,
சுற்றி வளைத்த
முள் விழுதுகள்.

என் சாத்தான்
என்னை
தூண்டியபோதும்,
என் விழிகோடுகள்
உன் முகத்தை
தவிர,
வேறெங்கும் தாண்டியதில்லை.
விதி தீண்டிய
காரணமா?
சதி அண்டிய
தோரணமா?
தெரியவில்லை.
என் தெய்வம்.....
நான் கதறி
வேண்டியபோதும்,
என்
முகம் அறைந்து
சென்றுவிட்டது.


இதோ....
மீண்டும் வந்திருக்கிறேன்,
நம்
முதல் சந்திப்பு.......
நிகழ்ந்த இடத்திற்கு.
அதோ.....
அந்த மரத்திற்கு
பின்னாலிருந்து,
எட்டி பார்க்கமாட்டாயா?
படகின் மறைவிலிருந்து
கைதட்டி அழைக்கமாட்டாயா?
விழி மூடி
முகம் தொலைந்து
அமர்கிறேன் நான்.
அழுகிறேன் நான்.......
வழுக்கிய கண்ணீரில்,
முகம் மலர்ந்து
சிரிக்கிறாய் நீ.




வெள்ளி, 14 அக்டோபர், 2011

இதுவும் உன்னைப் பற்றியதுதான் ......


இன்னமும்....
ஏதேனும் மிச்சம்
இருக்கிறதா?
என் காதலின்
எச்சம்......
எங்கேனும்,
ஒட்டிகிடக்கிறதா?
அதெப்படி......
என்னை
யாரென்றே தெரியாததைப்
போன்ற ஒரு
பார்வை......
நீ உமிழ்ந்த 
வெறுப்பின் கங்குகள்......
என்,
உச்சி முதல் பாதம்
வரை.....
கொன்று போட்டு.....
போதாதென்று,
திரும்பவும் வந்து
கொத்தி போடுகிறதடி.
கடந்த காலத்தில்......
எதுவுமே,
நிகழாலததைப்  போல்...
என்னை,
கடந்து செல்கிறாய்.
ஜென்மம் பல.......
தொடர,
ஆசைப்பட்டதை......
ஒரே இரவில்,
எதை கொண்டு
அழித்தாய்?
ஐயோ.........
என் உணர்வுகளை,
பொய்யென்று
பழித்தாய்?
மழுங்கி போன
அறிவிற்கு....
நீ வரமாட்டயென
தெரிந்தாலும்,
தரித்திரம் பிடித்த
இதயத்திற்கு.....
புரிய மறுக்கிறதே.
உன் நினைவைவிட்டு
பிரிய மறுக்கிறதே.
சோகம் தரும்.....
நினைவுகள்தான்,
அது,
உன்னை பற்றியது
என்பதால்......
சுகம் தருகின்றன.
இந்த அனுபவம்.....
இதையும் தந்ததற்கு
உனக்கு என்
நன்றிகள்.
என்றேனும் ஒரு
விடியலில்.....
நீ கண்விழித்த போது...
உன் விழியோரம்,
ஒரு துளி
காய்ந்து கிடக்கும்.....
அது நான்தான்
என்பதை.....
அன்றேனும்
புரிந்துகொள்.

வியாழன், 13 அக்டோபர், 2011

இருப்பேனடி......இறப்பேனடி........


கண்ணீர் துளிகள்
இமை தாண்டும்
முன்பே.......
இரு கையில்
ஏந்திய நீயா............
இன்று,
கடலில் மூழ்குவதைக் கண்டு....
கைக்கொட்டி ரசிப்பது.

சிறு கீறல் பார்த்து
கதறி அழுத
நீயா......
இன்று,
கழுத்து அறுப்பட்டு.....
துடித்த வேளையிலும்,
உதறி செல்வது.

இறுதி வரை.....
உடன் வருவேனென்று
சொன்ன நீயா........
இன்று,
என் இறுதியாத்திரைக்கு
நாள் குறித்து
சொல்வது.

உன் பேருக்குப்
பின்னால்,
என் பேர் எழுதி.....
பூரித்த நீயா.......
இன்று,
நான் மரித்த
புழுதியை....
பார்ப்பதும் பாவமென்று,
சொல்லி திரிவது.

என் தோள்கள்...
நீ ஓய்வெடுக்கும்
கிளைகள்....
ஒரு மழைநாளில்
பிதற்றிய நீயா........
இன்று,
வேரோடு சாய்ந்த
என்னை....
விளையாட்டாய்,
தாண்டி செல்வது.

உலகின் அத்தனை...
இன்பத்தினை,
தந்த நீ,
இன்று.......
பிரபஞ்சத்தின் அத்தனை...
வேதனைகளையும்,
நான் அனுபவிக்க
ஆசைப்படுகிறாய்.
உன் ஆசைப்படியே.....
வாழ்வதை,
தவமாகக் கொண்டவன்
நான்,
என்பதை.......
நீ உணராவிட்டாலும்.....
உயிரின் கடைசி
துகள்......
கருகும் வரையிலும்.....
உன்னை மறவாமல்
இருப்பேனடி......
இறப்பேனடி........

புதன், 12 அக்டோபர், 2011

என் நிகழ்வுகள்.....


யாரது,
என்னை பாதி
உறக்கத்தில் எழுப்பி........
என் தலைமுடியை
ரசிப்பது?
கண்ணைக் கவரும்
பாடல் ஒன்று......
தொலைக்காட்சியில்
ரசிக்கிறேன்..
நடு நடுவே.......
திரையிலிருந்து எட்டிப்
பார்த்து,
என் நெஞ்சை
தொட்டு செல்வது
யாரது?
வேலை செய்யப்
பிடிக்காமல்,
வெட்டியாக...........
அமர்ந்திருக்கும் நேரத்தில்,
என் காதருகே வந்து
ரகசிய சுவாசம்
விட்டு செல்வது,
யாரது?
நண்பர்கள் அரட்டைக்கு
இடையிடையே
என் இடுப்பை....
வெடுக்கென்று,
கிள்ளி செல்வது
யாரது?
ஏதோ ஒரு
திருமண வரவேற்பில்,
என் கையில்
கொடுத்த ரோஜாவில்.......
வேறு இதழ்
தெரிகிறதே.........
யாரது?
வண்டியில் தனியாக
செல்லும்
போதெல்லாம்.....
இறுக்கமான அணைப்பு
உணர்கிறேனே,
யாரது?
இருளில் தொலையும்போதெல்லாம்,
என் முன்னே..
ஒளி ஒன்று
தவழ்கிறதே.....
யாரது?
இப்படி என்னை.....
பைத்தியம் போல்
புலம்ப வைத்து.......
ஒன்றும் தெரியாதவள்
போல்,
எங்கோ நின்று
விளையாடுவது.......
யாரது?